1. தோட்டக்கலை

மிளகில் ஏற்படும் வாடல் நோய்- TNAUவின் மேலாண்மை ஆலோசனைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
TNAU Management Tips for Chili Disease!

வாடல் நோயில் இருந்து மிளகு செடிகளைப் பாதுகாப்பது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) விஞ்ஞானிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

மிளகு பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் களஆய்வு செய்தபோது, வாடல் நோய் தாக்குதல் அதிகமாகக் காணப்படுவது தெரியவந்தது.

வாடல் நோய் (Dryness)

 • இந்த நோயானது பைட்டோப்தேரா கேப்சிச எனும் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது.

 • இப்பூஞ்சாணமானது, இலை, தண்டு மற்றும் வேர் பகுதி என மிளகின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கும் தன்மையுடையது.

 • பொதுவாக நோயின் தொற்று வேர் பகுதிகளில் இருந்தே தொடங்கும்.

 • அறிகுறிகள் இலைப்பகுதியில் தெரிய ஆரம்பிக்கும்.

 • ஆரம்பத்தில் நீர் கோர்த்த அழுகல் போல் தோந்றி, பின் பகுப்பு நிறத் திட்டுக்களாக மாறி பின் உதிர்ந்து விடும்.

 • நோய் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, இலைகள் உதிர்வது இருக்கும். பின்னர் கொடிக்கும் பரவி காய்ந்துவிடுகிறது.

 • மேலும் மிளகு சரம் (ஸ்பைக்) தாக்குதலால், காய்கள் உதிர்ந்து விடுகின்றன. பொதுவாக நோய் தொற்று மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து கொடி விரைவாக வாடிவிடுகிறது.

நோய் மேலாண்மை (Disease management)

இந்த நோயை சரியான முறையில் நிர்வகிக்கத் தோப்பை சுத்தமாக வைத்து, முறையான உழவியல் முறைகள் மற்றும் தேவையானபோது, மருந்து தெளித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த முறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்நோயை நிர்வகிக்க கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

 • நோய் தாக்கியக் கொடிகளை உடனடியாக அகற்றி, எரித்துவிட வேண்டும்.

 • நோய் பாதிக்கப்பட்ட இடத்தின் மண்ணில், 1 கிலோ சுண்ணாம்பை இடவேண்டும்.

 • நோய் பாதிக்கப்பட்டு கொடி அகற்றிய இடத்தில், 1-2 மாதங்கள் கழித்து புதிய நடவு செய்யலாம்.

 • நாற்றுகளில் நூற்புழு இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 • வயல்களில் போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

 • வேப்பம்புண்ணாக்கு 1கிலோ/கொடிக்கு என்ற அளவில் இட வேண்டும்.

 • டிரைகோடெர்மா, பேசிலஸ் சப்டிலிஸ், பொக்கோமியா கிளாமிடோஸ்போரியா, ஆகியவற்றைத் தலா 10 கிராம் வீதம் 5 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

 • அல்லது நோய் தாக்குதல் காணப்பட்டவுடன் 1 சதவீதம் போர்டோ கலவை அல்லது 0.25 சதவீதம் மெட்டலாக்சில்+ மாங்கோசெப் பூஞ்சாணக் கொல்லியை வேர்ப்பகுதியில் மண் நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.

மேலும் படிக்க....

உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன்பு ஆஜராக மாட்டோம்- விவசாயிகள் அதிரடி!

பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!

வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

 

English Summary: TNAU Management Tips for Chili Disease!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.