நீர் மேலாண்மையை (Water Management) மேம்படுத்த சிறப்பாக பணியாற்றிவரும் தனிநபர்களையும், அமைப்புகளையும் அங்கீரித்து மதிப்பளிக்கும் வகையில், தேசிய தண்ணீர் விருதுகள்2020-என்ற விருதை மத்திய அரசு வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் (Applications) வரவேற்கப்படுகின்றன.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. ஆக நீரை சேமித்துப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் இன்றியமையாத கடமை. அதே நேரத்தில், நீரைப் பயன்படுத்துவதில் பல மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு சேகரித்து வைத்தால், எதிர்காலத்திற்கு பயன்படும்.
விண்ணப்பங்கள் (Applications)
அவ்வாறு நீர் மேலாண்மைக்கு வித்திடும், தனிநபர் அல்லது அமைப்புகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது மத்திய அரசு. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு கங்கை புத்தாக்கத் துறை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் தேசிய
தண்ணீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
இதன்படி
-
சிறந்த மாநிலம்
-
சிறந்த மாவட்டம்
-
ஐந்து மண்டலங்களுக்கு தலா இரண்டு விருதுகள் என மொத்தம் 10 விருதுகள்)
-
சிறந்த கிராமப் பஞ்சாயத்து (ஐந்து மண்டலங்களுக்கு தலா மூன்று விருதுகள்,மொத்தம் 15 விருதுகள்)
-
சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு
-
சிறந்த ஊடகம் (அச்சு மற்றும் இன்னணு, 6)
-
சிறந்த பள்ளி
-
வளாகப் பயன்பாட்டுக்காக சிறந்த நிறுவனம் குடியிருப்போர் நல சங்கம் ஆன்மிக அமைப்பு
-
சிறந்த தொழிற்சாலை
-
சிறந்த அரசு சாரா அமைப்பு
-
சிறந்த நீர் பயனர் சங்கம்
-
பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்கான சிறந்த தொழிலகம்
இந்தப் பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படும். எனவே இந்தத் தகுதிகளைக் கொண்ட தனிநபரும், அமைப்புகளும் விண்ணப்பிக்கலாம் என மத்திய ஜனசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
அடுத்தது ரயில் மறியல்- விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!
தினமும் ரூ.121 செலுத்தினால் ரூ.27 லட்சம் தரும் LICயின் கன்னியாதன் பாலிசி!