வியாபாரம் என்பது சுயவருமானத்திற்கானது என்ற போதிலும், வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை கொண்டதாகவும் இருக்கிறது. ஆனால் விவசாயம் என்பது முழுக்க முழுக்க பொதுநலன் சார்ந்தது.
விதைப்பந்து விற்பனை (Seed Ball Sales)
ஆக அதிலும் நல்ல பொருளை விலைமலிவாக விற்பனை செய்யும்போது, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். அந்த வகையில் தற்போது அதிக வருமானம் ஈட்டும் தொழில் என்றால் அது விதைப்பந்து விற்பனைதான்.
எனவே இதனை பொதுநலநோக்கத்தோடு, சுற்றுச்சூழலுக்கு ஆதரவு அளிக்கும் தொழிலாகவும் பார்க்க வேண்டும். மேலும் நம் எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமான மாசில்லாத உலகை ஒப்படைக்கும் உன்னத நோக்கம் கொண்டது என்றும் கூறலாம்.
விழிப்புணர்வு (Awareness)
தற்போது சுற்றுப்புறச் சூழல் மற்றும் இயற்கையில் மேல் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணமாக மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது.
மேலும் மரம் வைத்து பாதுகாத்து வளர்க்க முடியாத தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மரம் செடிகொடிகளை பரிசாக அளித்து கொண்டிருந்தனர். அதேபோல் தற்போது விதைப்பந்துகளை பரிசாக வழங்கி வருகின்றனர்.
இதனடிப்படையில் விதைப்பந்துகளை உற்பத்தி செய்து நாமே விற்பனை செய்தால் நல்ல லாபமும் இந்த சமுதாயத்திற்கு நாம் நல்லது சென்ற செய்தோம் என்ற மன திருப்தியும் 100% கிடைக்கும்.
முதலீடு (Investment)
முதலீடு சொல்லப்போனால் விதைப்பந்து தயாரிப்பு மற்றும் விற்பனை தொழிலை செய்ய ரூ3,000 இருந்தாலே போதும். மாதம் 20 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்.
விதைப்பந்து என்றால் என்ன? (What is Seed ball)
களிமண், செம்மண், பசுஞ்சாணம் போன்ற கலவையின் உள் விதைகளை வைத்து பந்துபோல் அல்லது கோலி உருண்டை அளவு சைஸில் செய்வததே விதைப்பந்து ஆகும்.
விதைப்பந்தில் உள்ள சிறப்பு இயல்பே நாம் எந்த இடத்தில் அதை போடுகிறோமோ அந்த இடத்தின் பருவ நிலை மற்றும் தட்பவெப்பநிலை சூழ்நிலைகளைத் தாங்கி வளரக்கூடிய தன்மை அந்த விதைக்கு கிடைக்கும்.
தயாரிக்கும் முறை (Preparation)
தேவையான பொருட்கள்
-
தோட்டத்து மேல் மண் (செம்மண் / களிமண்)
-
விலங்கு கழிவு (மக்கிய ஆடு அல்லது மாட்டு எரு / பசுஞ்சாணம் / மண்புழு உரம்)
-
நாட்டு மர விதைகள்
மண்,விலங்கு கழிவு, விதை ஆகியவற்றை 5 : 3 : 1 என்ற அளவில் எடுத்து விதையை உள்ளே வைத்து மூட வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் சிறிதளவு நீர் ஊற்றிப் பிசைந்து நடுவே, சேகரித்த விதைகளை வைத்து நிழலில் உலர்த்தி, பின் வெயிலில் ஒருநாள் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் விதை பந்துகளில் வெடிப்பு எதுவும் ஏற்படாமல் நன்கு காய்ந்து விடும்.
நாம் உருவாக்கிய இந்த விதை பந்து பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். குறிப்பாக பறவைகள், எறும்புகள், எலி போன்றவைகளிடமிருந்து ஒரு ஆண்டு வரை பாதுகாக்கும்.விதை பந்தில் கலந்துள்ள சாணமானது, நுண்ணுயிர்களை உருவாக்கி, செடியின் வேர், மண்ணில் எளிதில் சென்று தன்னை மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.
விதைக்க ஏற்ற மரங்கள் (Trees suitable for planting)
வேம்பு,புங்கன்,கருவேல்,வெள்வேல்,சந்தனம்,சீதாப்பழம்,வேங்கை,மகிழம்,வாகை,கொய்யா,புளி,ஆலமரம்,அரசு,புன்னை,வில்வம்,வள்ளி,கருங்காலி, நாகலிங்கம்
இவ்வகை நாட்டு மரங்கள் விதை பந்து தயாரிக்க உகந்தவை.
சந்தை வாய்ப்பு (Market opportunity)
-
தனியார் நிறுவனங்களும் தனிநபர்களும் விதை பந்துகளை பரிசாக வழங்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
-
அதேபோல் திருமணம் காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் பரிசாக இந்த விதைப்பந்து பை வழங்கப்பட்டு வருகிறது.
-
எனவே விதை பந்துகளை அழகாக செய்து, மிக சிறப்பாக பேக்கிங் செய்து அந்த நிறுவனங்களின் பெயர்களை அந்த பேக்கிங்கில் அச்சிட்டு விற்பனை செய்ய இயலும்.
-
இதில் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச செலவு என்றால் பேக்கிங் மட்டுமே.
-
இந்த பேக்கிங்கையும் மிகக் குறைந்த விலையில் பெற இயலும்.
மேலும் படிக்க...
கால்நடை விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை அபராதம் - மக்களே ஊஷார்!
தமிழகத்தில் வறண்ட வானிலைக்கு வாய்ப்பு!
விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!