1. கால்நடை

கால்நடை விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை அபராதம் - மக்களே ஊஷார்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Livestock farmers fined up to Rs 10,000 - People Ushar!
Credit : Live Law

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

  • ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கால்நடை கள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் பல நேரங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மேய்ச்சலுக்காக தன்னிச்சையாக சுற்றித்திரிவதை அனுமதிக்கக்கூடாது.

பிடிக்க உத்தரவு (Ordered to catch)

  • தன்னிச்சையாக சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடிக்க உள்ளாட்சி துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • அவ்வாறு கால்நடைகள் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால், அவை பிடிக்கப்பட்டு, கால்நடைகளின் பராமரிப்பு மையங்களில் ஒப்படைக்கப்படும்.

கடும் அபராதம் (Heavy fines)

பொது ஏலம் (Public auction)

3-வது முறைக்கு மேலும் கால்நடைகள் சாலைகளில் தன்னிச்சையாகச் சுற்றித்திரிவது தெரியவந்தால், அந்த கால்நடைகள் கைப்பற்றப்பட்டு பொது ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் தொகை அரசு கரூவூலத்தில் செலுத்தப்படும்.

அதுமட்டுமின்றி கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

கிரிமினல் நடவடிக்கை (Criminal action)

இதுதவிர, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலை விபத்து நேரிட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால், கால்நடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க....

கால்நடைகளை வளர்க்க விருப்பமா? பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

முள்ளங்கி சாகுபடியில் கூடுதல் வருமானம் ஈட்ட சிம்பிள் டிப்ஸ்!

நெல்லுக்கு எவ்வளவு நீர் தேவை? தெரியுமா உங்களுக்கு!

English Summary: Livestock farmers fined up to Rs 10,000 - People Ushar! Published on: 07 February 2021, 04:19 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.