1. செய்திகள்

விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

KJ Staff
KJ Staff
Paddy Purchase

Credit : Daily Thandhi

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Stations) இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன. இதனால், அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் சம்பா சாகுபடி (Samba cultivation) பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் வட்டாரத்தில் தூத்தூர், திருமழபாடி, குருவாடி, ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பளிங்காநத்தம், எலந்தைகூடம், காமரசவள்ளி, ஓரியூர், கள்ளூர், திருவெங்கனூர், திருமானூர், வடுகபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

இதேபோல் செந்துறை வட்டாரத்தில் குழுமூர், சன்னாசிநல்லூர், தா.கூடலூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டாரத்தில் கோடலிகருப்பூர், ஜி.கே.புரம், வாழைக்குறிச்சி, முட்டுவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், இடங்கன்னி, காரைக்குறிச்சி, கார்குடி ஆகிய கிராமங்களிலும், ஆண்டிமடம் வட்டாரத்தில் ஆண்டிமடம், பெரியாத்துக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. எனவே அந்தந்த பகுதிக்கு அருகே உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை (Direct Paddy Procurement Station) பயன்படுத்தி பயன்பெறலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா (Rathna) வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மகிழ்ச்சி:

நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விவசாயிகள் விரைவாக நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யலாம். நிவர் (Nivar), புரெவி புயல் (Burevi storm) மற்றும் பருவம் தவறிய மழையால், சோகத்தில் மூழ்கிய விவசாயிகளுக்கு, நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வருவது ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

எள், கடலைக்கு விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண் பல்கலைக்கழகம்!

மார்ச் மாதத்தில் வாழை விலை என்னவாக இருக்கும்? வேளாண் துறை கணிப்பு!

English Summary: Good news for farmers! Coming into first use today Paddy Procurement Stations!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.