Horticulture

Thursday, 12 November 2020 07:51 AM , by: Elavarse Sivakumar

Credit : The economic Times

விவசாயிகளை தேவைக்கு அதிகமாக உரங்களை வாங்குமாறுக் கட்டாயப்படுத்தக்கூடாது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் உரங்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது.

  • இதில் நெல் ரகங்களான கா-51 என்.எல். ஆர்- 34449, பி.பி.டி.-5204 மற்றும் எ.டி.டி-37 உள்பட மொத்தம் 350 மெ.டன் விதைகள், வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 250 மெட்ரிக் டன் தனியார் விற்பனை நிலையங் களிலும் கையிருப்பில் உள்ளன.

  • மேலும், நடப்பு மாதத்தில் சாகுபடியாகும் பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 1800 மெ. பன், டி.ர 920 மெ.டன். பொட்டாஷ் 750 மெ. டன் மற்றும் காய்ப்பாக்ஸ் 2.250 மெ.டன் ஆகியவை தனியார் சில்லறை உர விற்பனைக் கடைகளிலும் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பில் உள்ளன.

  • எனவே, விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்களை பெற்று பயனடைய ஏதுவாக, விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

  • அதில் உரங்களின் இருப்பு விவரங்கள் மற்றும் விலைப்பட்டியலை பதிவு செய்து விவசாயிகளின் பார்வைக்குத் தெரியும்படி வைக்க வேண்டும்.

  • உர விற்பனையாளர்கள் விற்பனை முனை எந்திரத்தின் மூலம் மட்டுமே உரம் விற்பனை செய்து விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும்.

  • அரசு நிர்ணயித்த அதிக பட்ச விலைக்கு அதிகமாகவோ, ஒரே விவசாயிக்கு அதிக உர மூட்டைகளையோ மற்றும் விவசாயி அல்லாதவர்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

  • மானிய உரங்களை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும் கூடாது.

  • உர இருப்பு பதிவேடுகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.

  • உரங்களை விற்பனை செய்யும் போது தேவைக்கு அதிகமான உரங்களை வாங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது.

  • இந்த வழி முறைகளை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப் பாட்டுச் சட்டம் 1985ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!

பால் பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்- மத்திய அரசின் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)