திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, சான்று அட்டை இணைக்கப்பட்ட உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதைகளின் தரம் (Quality of seeds)
நல்லத் தரமான விதைகள் மூலமே அதிகமான மகசூலைப் பெற முடியும். எனவே விதைகளின் தரத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது.
இதுகுறித்து, மடத்துக்குளம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறுகையில்,
தனிப்பயிர் (Individual crop)
நெல் அறுவடைக்கு பின் தாளடியாகவும், தனிப்பயிராகவும் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
உளுந்து ரகங்கள் (Varieties)
நடப்பு குறுவை மற்றும் எதிர்வரும் சம்பா பருவத்தில், உளுந்து சாகுபடி மேற்கொள்ளும் வகையில் வம்பன் 8, வம்பன் 10 ரக உளுந்து விதைகள், விதைப்பண்ணையில் இருந்து, கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
சான்று அட்டை (Proof card)
இவை விதைச்சான்று துறையினரிடம் சான்று பெற்று இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இந்த விதை மூட்டைகளுக்கு, சான்று அட்டை இணைக்கப்பட்டுள்ளது.
நீர் தேவை (Water is needed)
வம்பன் 8 ரகமானது குறைந்த செலவு மற்றும் குறைவான நீர் தேவை கொண்டிருப்பதால், அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் தரும்.
வறட்சியைத் தாங்கும் (Drought tolerant)
மண்ணில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, வறட்சியைத்தாங்கி வளரும் தன்மை உடையது.
500 கிலோ மகசூல் (Yield of 500 kg)
-
65 முதல் 70 நாளில், அறுவடை செய்யலாம். ஆடிப்பட்டத்திற்கு ஏற்றது. மஞ்சள் தேமல் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ஏக்கருக்கு, 500 கிலோ மகசூல் தரக்கூடியது.
-
வம்பன் 10 ரகம், 70 முதல் 75 நாளில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு, 400 முதல் 450 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
-
மஞ்சள் தேமல், இலை சுருக்கு வைரஸ் மற்றும் இலை மடக்கும் வைரஸ் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
உயிர் உரங்கள் (Bio-fertilizers)
-
இருப்பு வைக்கப்பட்டுள்ள இந்த விதைகள், உயிர் உரங்களுடன் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
-
தேவையுள்ள விவசாயிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
ஆடிப்பட்டம் தேடி விதைத்தால், அதிக மகசூல் நிச்சயம்!
நீர்வாழ் உயிரி வளர்ப்பு மாதிரி திட்டத்தில் பயன்பெற தொழில்முனைவோருக்கு அழைப்பு!