1. விவசாய தகவல்கள்

ஆடிப்பட்டம் தேடி விதைத்தால், அதிக மகசூல் நிச்சயம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Aadi Pattam

Credit : Dinamani

கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். ஜூனில் துவங்கும் தென் மேற்கு பருவ மழையால் (South west monsoon) பூமி குளிர்ந்து ஈரப்பதத்துடன் மண், பாசன வசதிக்கு ஏற்ப தயாராக இருக்கும். இதன்படி ஆடியில் விதைத்து தையில் அறுவடை (Harvest) செய்வர்.

அதிக மகசூல்

ஆடி பெருக்கு அன்று தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் நாற்று நடுவர். விதைப்பு செய்வது வழக்கம். ஆடிப்பட்டம் மேற்கொள்ளும் விவசாயிகள் தரமான விதைகளை தேர்வு செய்து விதை நேர்த்தி செய்தால் மட்டுமே அதிக மகசூல் (High Yield) பெற்று நல்ல லாபம் பெறலாம்.

விவசாயத்திற்கு விதையே ஆதாரம். விதையின் சுத்தத்தன்மை, ஈரப்பதம் (Moiture), முளைப்புத்திறன் ஆகியவற்றை நல்ல முறையில் பராமரிப்பதால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும்.

விதை பரிசோதனை

விவசாயிகள் விதைகளின் தரம் குறித்து பரிசோதனை செய்ய மாவட்ட விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி விதை முளைப்புத்திறனை அறிந்து கொள்ளலாம் என மதுரை விதை பரிசோதனை அலுவலர் சிங்காரலீனா தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு:
99528 88963

மேலும் படிக்க

கால்நடைகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

மழைக்காலத்தில் துள்ளுமாரி நோயிலிருந்து செம்மறியாடுகளை பாதுகாக்க என்ன செய்யலாம்?

English Summary: If you plant in search of adipattam, high yield is guaranteed!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.