கரும்பு விவசாயத்துக்கான இயந்திரம் (Sugarcane Harvester) பெற தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநர் ரஹமத்துல்லா கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
-
தருமபுரி மாவட்டம் கோபாலபுரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயத்துக்கு பயன்படுத்தும் இயந்திரங்கள் வாங்கிட விவசாயிகளுக்கு மானிய உதவி அளிக்கப்படுகிறது.
-
இத்திட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின கரும்பு விவசாயிகளுக்கு 2 பவர் வீடர், 4 பவர் டில்லர், 1 ரோட்டரி மல்சர், 1 மினி டிராக்டர், 1 நிழல்வலைக் கூடம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
-
எனவே, மேற்கண்ட இயந்திரங்களை வாங்க விரும்பும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின கரும்பு விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான தங்கள் பகுதி அலுவலரை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஒரு அங்குலம் மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?
விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்!
மழைக்காலங்களில் கால்நடைகளைக் கலங்கடிக்கும் எலிக்காய்ச்சல் - கட்டுப்படுத்துவது எப்படி?