வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், இந்த ஆண்டு இளநீர் (Young Water) விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை அதிகரித்திருப்பதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னை சாகுபடி (Coconut cultivation)
திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை மற்றும் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.
இங்கு உற்பத்தியாகும் தேங்காய், இளநீர் போன்றவை உள்ளூரில் மட்டுமல்லாமல், வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர் போன்ற பிற மாவட்டங்களுக்கும் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
வெயில் தாக்கம் (Summer Heat)
தற்போது காலை, மாலை வேளைகளில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது. இதனால் இளநீர் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், உடுமலையில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கும் (Demand will increase)
ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பதால் இளநீர் விற்பனை அதிகரித்துக் காணப்படும்.இங்கிருந்து இளநீர் அனுப்பினாலும், வெளி மாவட்ட வியாபாரிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.
தற்போது வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக இளநீர் விற்பனை அதிகரிக்கும். மேலும், இளநீரிலுள்ள சத்துக்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், காலை வேலையில் இளநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உருவாகியுள்ளது.
எனவே ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் இளநீருக்கான ஆர்டர்கள் வருகின்றன.இதனால் உடுமலை பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு, வியாபாரிகள் நேரடியாக வந்து இளநீரை வாங்கி லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.
மேலும் படிக்க....
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!
பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!
வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!