1. செய்திகள்

வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொப்பரை மற்றும் பெரும்பாலான காய்கறிப் பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீட்டு தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், சொட்டு நீர் உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி கூறுகையில், வீடுகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் மாடியில் தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் பயிரிட்டால் நன்கு வளரும் என்றும், நல்ல வருமானம் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், இதை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில், காய்கறி உற்பத்தி பெருக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காய்கறி விதைகள் வழங்கல்

மேலும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் கடந்த நவம்பர் மாதம் மானியத்தில் வழங்கப்பட்டது. தக்காளி, அவரை, வெண்டை, பீன்ஸ், முருங்கை விதை பாக்கெட்டுகள் அடங்கிய தொகுப்பு விலை ரூ.25 மானியம் போக, 15 ரூபாய் செலுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

 

சொட்டுநீர் உபகரணங்கள் வழங்கல்

தற்போது, இரண்டம் கட்டமாக வீட்டு மாடி தோட்டத்திற்கு குறைவான தண்ணீரை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். இதற்கு, 1,120 ரூபாய் மதிப்புள்ள சொட்டு நீர் பாசன உபகரணங்களை, ரூ.720 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

மானியம் பெறுவது எப்படி?

இதனை பெற விவசாயிகளும், பொதுமக்களும் ஆதார் நகல் கொண்டு வந்து, கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 99655 62700, 95850 98230 என்ற மொபைல் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

மரவள்ளி கிழங்கிலிருந்து மதிப்புக்கூட்டு பொருள் தாயரிப்பு! - விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!

நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!

English Summary: Subsidy for drip irrigation equipment to set up home garden Published on: 11 February 2021, 04:07 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.