மண்ணீன் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்க வேண்டுமானால், விவசாயிகள் கோடை உழவை (Summer plowing) செய்து பயன்பெற வேண்டும் என நாமக்கல் மாவட்ட வேளாண்மைத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வேளாண்துறை அறிவுறுத்தல் (Agricultural instruction)
இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜாமணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:
கோடை உழவு (Summer plowing) செய்ய இது ஏற்ற தருணமாகும். கோடை மழையைப் பயன்படுத்தி உழவு செய்வது மிகவும் அவசியமாகும்.
-
இரும்பு கலப்பை அல்லது டிராக்டர் மூலம் (Tractor) வயலில் குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக, புழுதி பட உழவு செய்ய வேண்டும்.
-
இதனால் புல், பூண்டுகள் (Grass, garlic) வேர் அறுபட்டு, காய்ந்து கருகி விடும்.
-
இதன் காரணமாக, கடினத்தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து(The soil lumps are broken), மண் இலகுத் தன்மை அடைகிறது.
-
பயிர்ப்பருவ காலங்களில், சில வகை பூச்சிகளின் புழுக்கள்(Worms of insects), மண்ணுக்குள் சென்று, கூண்டுப் புழுவாக மாறி வளர்ந்து கொண்டிருக்கும்.
-
கோடை உழவு (Summer plowing) செய்வதன் வாயிலாக, இவ்வகை கூண்டுப் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்படுகின்றன.
-
அவைகளை பறவைகள் (Birds) பிடிப்பதால் அவற்றின் உற்பத்தி அழிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக அடுத்த பயிர் சாகுபடியின் போது பூச்சிகளின் தாக்குதல் (Insect attack) வெகுவாகக் குறைகிறது.
-
மேலும், மண்ணில் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது மழைநீர் பூமிக்குள் சென்று மண்ணில் ஈரப்பதம் (Humidity) காக்கப்படுகிறது.
-
மண்ணின் தன்மை (The nature of the soil) மேம்படுவதுடன், நாற்றங்கால் மற்றும் நடவு, வயல் தயாரிப்பு, மிகவும் எளிதாகும்.
-
மண் இலகுத்தன்மை பெறுவதால் அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு இடும் உரம் சமச்சீராக (Compost symmetrically) கிடைக்கும்.
இதனால் பயிர் செழித்து வளர்வதுடன், மகசூல் அதிகரிக்கும்.
எனவே, விவசாயிகள் தவறாது கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
காளான் தாய் வித்துகள் தயாரிக்கும் எளிய வழிமுறை!
மானியம் பெற்று தருவதாக விவசாயிகளிடம் மோசடி!
ஆற்காடு அடுத்த கலவையில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு!