பயிர்களின் பாதுகாப்புக்காகப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது, பாதுகாப்பு அம்சங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயியின் பொறுப்பு (The responsibility of the farmer)
விவசாயம் என்பது சவால் மிகுந்தது. அதிலும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்துப் பயிர்களைப் பாதுகாப்பது கூடுதல் சவாலானது. குறிப்பாக பயிர்களுக்கு எந்த அளவுக்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, விதிகளை மீறாமல் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்க வேண்டியது ஒவ்வொரு விவசாயியின் கடமை. இது அவர்களது பொறுப்பும்கூட.
விவசாயமே வாழ்வியல் (Agriculture is biology)
அதனைக் கவனத்தில்கொள்ளாமல், கூடுதல் மகசூலுக்காக அதிகப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு விவசாயம் செய்தல் கூடாது.ஏனெனில் விவசாயம்தான் நம்முடைய வாழ்வியலாகக் கருதினால், நாடும் வளம் பெறும், வீடும் நலம்பெறும்.
அதேநேரத்தில், பயிர்களைத் தாக்கி துவம்சம் செய்யும், பல்வேறு பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த, பல வகையான மருந்துகளை விவசாயிகள் தெளிக்கின்றனர்.
இவ்வாறு, மருந்து தெளிக்கும் போது, பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டார தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறுகையில்:
வழிமுறைகள் (Instructions)
பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவுடன், அதன் மேல் லேபிளில் (Label) உள்ள வழிமுறைகளைக், கவனமாகப் படிக்க வேண்டும்.
பாதுகாப்பு உடைகள் (Safety wear)
மருந்து தெளிப்பவர் பாதுகாப்பு உடைகளையும், கையுறை, காலணி கட்டாயம் அணிவது அவசியமாகும்.
கசிவுகள் கூடாது (No leaks)
-
தெளிப்பான்களை, நன்கு பரிசோதித்து, கசிவுகள் இல்லாத வாறு, சரி செய்து, சரியான இயக்கத்துக்கு, கொண்டு வர வேண்டும்.
-
சோப்பு, சுத்தமான தண்ணீர் ஆகியவற்றை, மருந்து தெளிக்கும் இடத்தில் வைத்து கொள்ளலாம்.
தூங்கக்கூடாது (Do not sleep)
பூட்டிய அறையில், மருந்துகளைத் தெளிக்கவோ, தூவுவதோ கூடாது. காலியான மருந்து பாட்டில்களைப் புதைத்து விட வேண்டும். மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைகளில், உறங்கக்கூடாது.
ஈரம் உலரும் (Moisture dries)
மருந்து தெளித்தவுடன், தெளிப்பானின் மூடி மற்றும் பிளாஸ்டிக் குழாய்களைத் திறந்து வைப்பதால், ஈரம் உலர்ந்து விடும். நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்களில், மருந்துகள் சேராமல், தெளிக்க வேண்டும்.
மருந்து தெளிக்கும் போது, காற்றின் திசையை அறிந்து அடிக்க வேண்டும். இத்தகைய வழிமுறைகளை, விவசாயிகள் பின்பற்ற வேண்டியது மிக மிக அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விபத்துக்களைத் தவிர்க்க (Avoid accidents)
பயிர்களின் பாதுகாப்புக்காக முயற்சி செய்யும் விவசாயிகளின் பாதுகாப்பும் மிக மிக இன்றியமையாதது என்பதை உணர்ந்து செயல்பட்டால், எதிர்பாராத வகையில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க...
ஆரோக்கிய நொறுக்குத்தீனியாக உடல்நலம் காக்கும் தாமரை விதை!