Horticulture

Wednesday, 04 November 2020 02:00 PM , by: Elavarse Sivakumar

Credit : Asianet Tamil

நெல் சாகுபடியில் வறட்சியை தாங்கும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டார நெல் சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஜா தெரிவித்துள்ளதாவது:

  • கல்லல் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சுமார் 2500 ஹெக்டருக்கு மேல் நேரடியாக நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

  • தற்பொழுது விதைப்பு செய்து 45-60 நாட்கள் ஆன நிலையில் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் மழைப் பொழிவு இல்லை.

  • இதனால் நீர்லைகள் வற்றி, நீரின்றி பெரும்பான்மையான நெல் பயிர்கள் பாதிப்படைந்து காணப்படுகின்றன.

  • இதற்கு திரவ நுண்ணுயிரியான பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் கரைசலை லிட்டருக்கு 200 மி.லி கரைசலை கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.

  • இதனை இராசயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் சேர்த்து தெளிக்க கூடாது.

  • இதனை தெளிப்பதன் மூலம் பயிர்களுக்கு தேவையான பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின் மற்றும் ஆக்சின்களை அளிக்கப்படுகிறது.

  • இவை பயிர்களின் வளர்ச்சி பருவத்தை குறைத்து பயிர்களின் நிறம் மாறாமலும், பயிர்கள் காயாமலும் பாதுகாத்து பயிர்களுக்கு வறட்சியினை தாங்கும் திறனை அளிக்கின்றன.

  • அதே சமயத்தில் மகசூல் அதிகரிக்கவும் உதவுகின்றன.

  • பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தமிழ்நாடு மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள நுண்ணுயிரியல் துறை பேராசி ரியர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்,

  • மேலும் இது கிடைக்காதபட்சத்தில் 1% பொட்டாசியம் குளோ ரைடுகரைசல் அதாவது 2 கிலோ (MoP) பொட்டாஸ் உரத்தினை 200 லிட்டர் நீருடன் கலந்து 1 ஏக்கர் வயலில் மாலை நேரங்களில் தெளிப்பதன் மூலம் நெல் பயிரினை காய விடாமல் 7-10 நாட்கள் வரை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

விவசாயத்திற்கு அரசு வழங்கும் இலவச பைப்லைன்கள் - பெறுவது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)