
Credit : You Tube
மனித வாழ்க்கைக்கு மட்டுமல்ல விவசாயத்திற்கு ஆதரமே நீர்தான். அதனால்தான் நீர் இன்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். குறித்த நேரத்தில் சரியான அளவு நீர் பாய்ச்சினால், பயிரின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.
எனவே விவசாயத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் தண்ணீர்கொண்டுசெல்லும் பைப்லைகன்களை (Pipelines) விவசாயிகளுக்கு அரசின் மானியத்தில், அதவாது இலவசமாக வழங்ககுவது.
இந்தத்திட்டத்தின் படி சிறுவிவசாயிகளுக்கு 400 அடி நீளமுள்ள பைப்லைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது 3 இன்ச் (Inch) அளவுள்ள 20 பைப்லைன்கள்.

Credit : Data Drip
பைப்லைன்கள் (Pipelines)
இவை வளையும் தன்மையுடன் கூடியவை என்பதால், விவசாயிள் தங்களுடைய மொத்த தேவையையும் எளிதில் பூர்த்தி செய்து கொள்வதுடன், தங்களுடைய விளைநிலம் முழுவதும் கொண்டு செல்ல முடியும். சிறு விவசாயிகளுக்கு தலா 20 பைப்லைன்களும், பெரு விவசாயிகளுக்கு தலா 30 பைப்லைன்களும் வழங்கப்படுகின்றன.
சொட்டு நீர் பாசனமாக இருந்தால், அதற்கும், Sprinkler lineனாக இருந்தால் அதற்கு ஏற்றவாறும் இந்த இலவச பைப்லைன்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி (How to Apply)
-
இதனைப் பெறுவதற்கு நீங்கள் சிறு விவசாயியாக இருந்தால், உங்கள் பகுதி வேளாண் அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
-
பெரு விவசாயியாக இருந்தால், அவர்களும் அதற்கான சான்றிதழை ஒப்படைக்க வேண்டும்.
-
விவசாயிகள் தங்களுடைய சான்றிதழுடன், அருகில் உள்ள வேளாண் அலுலகங்களுக்கு நேரில் சென்று இலவச பைப்லைனிற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவராக இருந்தால், உடனடியாக பைப்லைன் கிடைக்கும்.
மேலும் படிக்க...
மழைக்காலங்களில் வயல்வெளியில் படைபெயடுக்கும் பாம்புகள்- எச்சரிக்கை அவசியம்!
விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் தொகை செலுத்தலாம்- வேளாண்துறை அழைப்பு!
நெற்பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி -கட்டுப்படுத்தும்வழிமுறைகள்!
Share your comments