Horticulture

Sunday, 12 December 2021 11:35 AM , by: Elavarse Sivakumar

பொதுவாகக் கார்த்திகைப் பட்டத்தில் மணிலா விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் இரட்டிப்பு இலாபம் பெறலாம் என விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் க.கதிரேசன் தெரிவித்தார்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மணிலா கார்த்திகை பட்டத்தில் அதிகளவில் விதைக்கப்படுகிறது. எனவே, இந்தப்பட்டத்தில் மணிலா விதைப்பண்ணை அமைத்து அதிக இலாபம் பெறலாம்.

ரகங்கள் (Varieties)

மணிலாப் பயிரில் விதைப்பண்ணை அமைக்க தரணி, கதிரி-6, கதிரி-9, டிஎம்வி 14. ஜிஜேஜி 31. ஜிஜேஜி 9. ரகங்களில் ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகள் உள்ளன.

விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை அணுகி மானிய விலையில் விதைகளைப் பெற்று விதைப் பண்ணை அமைக்கலாம்.

வழிமுறைகள் (Instructions)

விதைகளை விதைப்பதற்கு முன் மணிலா ரைசோபியம் நுண்ணு யிர் பாக்கெட்டை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்திய பின் விதைக்கவும்.

விதைத்த 30 நாட்களுக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி விதைப்பண்ணையை பதிவு கட்டணமாக ரூ.25 (ஒரு விதைப்பு அறிக்கை) வயல் ஆய்வுக் கட்டணமாக ரூ.50 ஒரு ஏக்கருக்கு) பரிசோதனை கட்டணமாக ரூ.30 ஒரு விதைப்பு அறிக்கை) என்ற செலுத்த வேண்டும்.

வயல் ஆய்வு (Field study)

விதைச்சான்று அலவலர்கள் விதைத்த 60து நாள் மற்றும் 90வது நாள் என 2 முறை வயலில் ஆய்வு செய்வார்கள்.

3வதாக 135 நாட்களுக்குள் மணிலா விதைக் குவியலை ஆய்வு செய்வார்கள்.
இந்த வயல் ஆய்வின் போது பிற ரக கலவன்கள் ஏதாவது இருந்தால் அதனை அப்புறப்படுத்தச் சொல்வார்கள்.

மணிலாப் பயிருக்கு அடியுரமாக ஜிப்சம் எக்கருக்கு 80 கிலோவும், விதைத்த 45து நாள் மேலுரமாக 80 கிலோ என மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதனால் திரட்சியான காய்கள் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும்.

இரட்டிப்பு லாபம் (Double profit)

மேலும் தகுதியான விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அரசு வழங்குவதால் விதைப்பண்மை விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!

நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)