1. தோட்டக்கலை

சிறு தானியங்கள் மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Small Grains Valuable Food Preparation Training!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பது குறித்து 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வேளாண் படிப்பு (Agricultural Studies)

கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறது.

தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)

சான்று பெற்ற பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம் என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது.

மகத்தான் பணி (Great job)

அதேநேரத்தில் தொழில்முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி மகத்தானது.இதன் தொடர்ச்சியாக உங்களைத் தொழில் முனைவோராக மாற்ற ஏதுவாக இரண்டு நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகிற 07.12.201 மாற்றும் 08.12.2021 தேதிகளில் நடைபெற உள்ளது.

சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கப்பு, சோளம், சாமை, தினை, 'பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இருப்பினும் நகர்ப்புறத்தில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு சத்துக்கள் நிறைந்த சிறு தானிய வகைளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கீழ்க்காணும் மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சிறப்பம்சம் (Highlight)

பாரம்பரிய உணவுகள்
பாஸ்தா உணவுகள்
அடுமனைப்பொருட்கள்
உடனடி தயார்நிலை உணவுகள்

எளிய முறையில் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத்  தொழில் நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ1500+18% GST சேர்த்து மொத்தம் ரூ.1770/- கட்டணமாகச் செலுத்த வேண்டியது அவசியம். இதனைப் பயிற்சித் தொடங்கும் முதல் நாளன்று செலுத்தி பயிற்சியில் கலந்துகொண்டு பயனபெறலாம்.

தொடர்புக்கு (Contact)

பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003.
என்ற முகவரியிலும், 0422- 6611268 என்றத் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

உலகிலேயே அதிக மதிப்புமிக்க மரம்: ஒரு கிலோ ரூ.75 லட்சம்!

மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Small Grains Valuable Food Preparation Training!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.