உலகின் முதல் நானோ யூரியா (திரவ) ஆலை இன்று திறக்கப்பட்டுள்ளது. நானோ யூரியா (திரவ) ஆலை சுமார் 175 கோடி ரூபாய் செலவில் விவசாயிகளுக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யும் முயற்சியில் கட்டப்பட்டுள்ளது. இது குஜராத் மாநிலம் கலோலில் கட்டப்பட்டுள்ளது. நானோ யூரியாவைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர் விளைச்சல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அல்ட்ராமாடர்ன் நானோ உரத் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. ஆலை ஒரு நாளைக்கு 500 மில்லி அளவிலான 1.5 லட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மே 28 ஆம் நாளான நேற்று காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களின் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார். அதன் பின்பு, இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட்டில் (Indian Farmers Fertilizer Cooperative Ltd (IFFCO) கட்டப்பட்ட உலகின் முதல் நானோ யூரியா (திரவ) ஆலையைத் திறந்து வைத்தார். அதோடு, 'சஹகர் சே சம்ரித்தி' என்ற தலைப்பில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களின் கருத்தரங்கு அமைப்பது, மாநிலத்தில் கூட்டுறவு இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாநிலத்தின் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் இருந்து 7,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
நானோ யூரியா என்றால் என்ன?
பயிர்களின் ஊட்டச்சத்து திறனை மேம்படுத்த நானோ தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்படும் யூரியா நானோ யூரியா எனப்படும். நானோ யூரியா திரவமானது வழக்கமான யூரியா தேவையை மாற்றும். அதாவது, அதன் தேவையைக் குறைந்தது 50 சதவிகிதம் குறைக்கம் தன்மை உடையது ஆகும்.
நானோ யூரியா திரவத்தால் என்ன பயன்?
நானோ யூரியா திரவமானது தாவர ஊட்டச்சத்திற்குப் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மேம்பட்ட ஊட்டச்சத்துத் தரத்துடன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இஃப்கோவின் கூற்றுப்படி, நானோ யூரியா திரவமானது நிலத்தடி நீரின் தரத்திலும் நல்ல நிலையை ஏற்படுத்தும். இது புவி வெப்பமடைதலைக் குறைப்பதில் மிகவும் குறிப்பிடத்தக்கது மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியில் பங்கு வகிக்கும்.
இது ஏன் குறிப்பிடத்தக்கது?
நானோ யூரியா திரவத்தை அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் விவசாயிகள் அதன் பயன்பாடு மண்ணில் யூரியாவின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் சமச்சீர் ஊட்டச்சத்துத் திட்டத்தை அதிகரிக்கும். இது பயிர்களை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும். அதிகப்படியான யூரியா சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், மண்ணின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதோடு, தாவரங்கள் நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகின்றன. பயிர் முதிர்ச்சியடைவதை தாமதப்படுத்துகிறது மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் நானோ யூரியா விளைச்சலுக்கு நல்ல உகந்த சூழலைத் தர வல்லது எனக் கூறப்படுகிறது.
நானோ யூரியாவின் விலை எவ்வளவு?
நானோ யூரியா திரவம் விலை குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.
நானோ யூரியாவில் 500 மில்லி பாட்டிலில் 40,000 பிபிஎம் நைட்ரஜன் உள்ளது. இது ஒரு பை வழக்கமான யூரியாவால் வழங்கப்படும் நைட்ரஜன் சத்து தாக்கத்திற்குச் சமம்.
இது விவசாயிகளின் உள்ளீட்டுச் செலவைக் குறைப்பது மட்டுமின்றி, அதன் சிறிய அளவு காரணமாகவும், தளவாடங்கள் மற்றும் கிடங்குச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும்.
நானோ யூரியாவின் 500 மில்லி பாட்டிலின் விலை விவசாயிகளுக்கு ரூ.240 ஆக இருக்கும், இது வழக்கமான யூரியாவின் ஒரு மூட்டையின் விலையை விட 10 சதவீதம் மலிவானது.
நானோ யூரியா முதன்மையாக IFFCO-இன் இ-காமர்ஸ் தளத்தில் அதன் விற்பனையைத் தொடங்கும். பின்பு, அதன் கூட்டுறவு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் சேனல் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில் அது வழிவகை செய்யும். அதன் பிறகு வணிகரீதியான வெளியீடு விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
கிருஷி யந்திர மானியத் திட்டம் 2022: 50% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?