கிருஷி யந்திர மானியத் திட்டம் 2022: 50% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?

Poonguzhali R
Poonguzhali R

விவசாயம் செய்வதற்கு வேளாண் கருவிகள் மிக இன்றியமையாதவை ஆகும். அவற்றை ஒவ்வொரு விவசாயியும் தாங்களே சொந்தமாக வாங்கிக் கொள்ள முடியும். அவ்வாறு வாங்க அரசே 50% மானியத்தினை வழங்குகிறது. அத்தகைய திட்டம் தான் Krishi Yantra Subsidy Scheme 2022 ஆகும். இதில் எவ்வாறு வேளாண் இயந்திரங்களைப் பெறலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்றது. அத்தகைய விவசாயத்தினை மேம்படுத்துவதற்கு அரசுகள் பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வருகின்றது. அந்த நிலையில் விவசாயத்திற்கு உதவக் கூடிய வேளாண் இயந்திரங்களைக் குறைந்த விலையில் வாங்குவதற்கு அரசு உதவுகிறது.

ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தாங்களே சொந்தமாக வேளாண் கருவிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான பொருளாதார நிலை அவர்களிடம் இருக்காது. அந்த கவலையைப் போக்கும் நிலையில் அரசே விவசாயத்திற்குத் தேவையான வேளாண்கருவிகளை வாங்க 50% மானியத்தினை வழங்குகிறது. எஞ்சிய 50% தொகையை வங்கியில் கடனாகவும் பெற்றுக் கொண்டு சொந்தமாக வேளாண் இயந்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கிருஷி யந்திர மானியத் திட்டம் என்பது விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாய உற்பத்திக்கு ஏற்றவாறு விவசாயக் கருவிகளை வாங்குவதற்கும் மானியம் வழங்க மத்திய மற்றும் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் விவசாயத்திற்கு உதவும் வேளாண் கருவிகளான டிராக்டர், டில்லர், ரோட்டாவேட்டர், ஹே டேக்கர், வைக்கோல் பேலர், நியூமாடிக் பிளாண்டர், லேசர் லேண்ட் லெவெலர், டிஎஸ்ஆர் இயந்திரம், நெல் டிரான்ஸ்-பிளாண்டர் முதலான விவசாயம் சார்ந்த கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க: கோழி வளர்ப்புக்கு 50,000 மானியம்! இன்றே பதிவு செய்யுங்கள்!!

திட்டத்தைப் பெற தகுதி

  • விவசாயம் செய்பவராக இருக்க வேண்டும்.
  • வேளாண் கருவிகளுக்கு என வழங்கப்படும் மானியத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பதால் விண்ணப்பதாரர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
  • சொந்த நிலம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

தேவையான் சான்றுகள்

  • ஆதார் கார்டு
  • வாக்காளர் அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம்
  • பான் கார்டு
  • விண்ணப்பப் படிவம்
  • கட்டணரசீது

மேலும் படிக்க: விவசாயத்திற்கு 5 லட்சம் கடன் பெறலாம்! விவரம் உள்ளே!

சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் வேளாண் கருவி மானியத்திற்குத் தகுதிபெற்றவர் குறித்த தகவல் அறிவிக்கப்படும். விவசாய நிலத்தின் அளவைப் பொறுத்து 40 முதல் 50% வரை மானியம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?

டிராக்டர் லோன் எங்கு பெறுவது? எப்படி பெறுவது?

English Summary: Krishi Yantra Subsidy Scheme 2022: How to get agricultural machinery at 50% subsidy? Published on: 28 May 2022, 12:58 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.