சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 4 May, 2021 3:58 PM IST
CT scan
CT scan

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லோசான அறிகுறி தென்பட்டால், CT-ஸ்கேன் எடுப்பதை தவிர்ப்பது நல்லது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று ஒருவரை தாக்கியதும், அவரது நுரையீரல் பகுதி அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, நேயாளி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடுகிறது. இதனால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு, CT-ஸ்கேன் (CT scan) எடுக்கப்பட்டு நுரையீரல் மற்றும் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்பட சிகிச்சை அளிக்கப்படும்.

 

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சையளிக்க படுக்கைகள் இன்றி திணறி வருகின்றனர். அத்துடன் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அறிகுறியில்லாத கொரோனா வைரஸ் தாக்குதல், லேசான அறிகுறிகளுடன் (Covid-19 symptoms) உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளும் உள் உறுப்புகளில் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள CT-ஸ்கேனை அதிக அளவில் நாடுகின்றனர். பொதுவாக CT-ஸ்கேன் உள் உறுப்புகளை தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கும் என்பதால் பொதுமக்களும் அதற்கு பயப்படுவதில்லை. 

இந்நிலையில், CT-ஸ்கேன் மிகவும் ஆபத்தானது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா (AIIMS director Dr Randeep Guleria) எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது., "ஆய்வுகளின்படி 30 முதல் 40% மக்கள் கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் குணமடைந்து வருகின்றனர் என்றார். 

மேலும் அவர் கூறுகையில், மிதமாக கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் தேவையில்லாமல் CT-ஸ்கேன் எடுப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார். அத்துடன், உங்களுக்கு கொரோனா தொடர்பாக சந்தேகம் இருந்தால் முதலில் எக்ஸ்ரே எடுங்கள். பின்னர், மருத்துவர்கள் அறிவுறுத்தினால் மட்டுமே CT-ஸ்கேன் எடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.  அதுமட்டும் இன்றி "ஒருமுறை நீங்கள் CT-ஸ்கேன் எடுத்தால் அது 300 மார்பக-எக்ஸ்ரே எடுப்பதற்கு சமமானது (1CTScan = 300-400 Chest X-rays!) எனவும் கூறியுள்ளார். இது நமக்கு புற்றுநோய் விளைவுகளை ஏற்படுத்தும்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது! - WHO எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம்! தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

English Summary: 1 CT scan is equivalent to 300 chest X-rays', Guleria warns against risk of cancer
Published on: 04 May 2021, 03:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now