1. செய்திகள்

கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Covid-19

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாள்ளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள 2வது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.

பாதிப்பு விபரம்

  • இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது.

  • அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 93,528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது.

  • மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 14,71,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • இந்தியாவில் இதுவரை 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 26,20,03,415 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் நேற்று 13,84,549 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

தமிழகத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி திருவிழா

இலாபகரமாக மாட்டுப்பண்ணையை வழிநடத்த சில டிப்ஸ்!


English Summary: Corona 2nd wave : 2 lakh people confirmed covid cases to be infected in one day!

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.