தமிழகத்தில் கொரோனோ பரவல் மீண்டும் பரவ தொடங்கும் இந்த சூழலில் அந்த பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுதும் கடந்த 2020- ஆண்டின் தொடக்கம் முதலே கொரோனா பரவத் தொடங்கியது அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும். உச்சம் அடைய பெற்ற பின்னர் கொரோனா-வால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா இறப்புகள் படிப்படியாக உச்சக் கட்ட நிலையினை அடைந்த நிலையில் ஊரடங்கு என்பது பரவலாக அனைத்து இடங்களிலும் போடப்பட்டது.
அதிக ஆபத்தில் தடுப்பூசி போடப்பட்ட முதியவர்கள்: ஆய்வில் தகவல்
ஊரடங்கைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கொரோனா-வைத் தடுக்கும் விதமாகக் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. அதன் தொடர்ச்சியாக கொரோனா படிப்படியாகக் குறைந்து வந்தது. ஆனால் இன்று மீண்டும் உச்சநிலையினை அடையும் அபாயத்தில் தமிழகம் வந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இனி உங்க காட்டில் பணமழைதான்! அதிக வருவாய் தரும் SB அக்கவுண்ட்!
தமிழகத்தில் கடந்த வெள்ளி-யன்று கொரோனா பரவல் 200 எனும் எண்ணிக்கையை எட்டியது. அதே போல் நேற்றான சனிக்கிழமையன்று 217 எனத் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையினைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டு, சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது நினைக்கூறத் தக்கது.
ஆப்பிள் ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி! ரூ.2500-க்கு ஐபோன்!!
கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளைச் சுகாதாரத்துறை முதலாக இருக்கக் கூடிய உள்ளாட்சித் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!