இந்த ஆண்டு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் தனியார் கொள்முதல் அதிகரித்ததன் காரணமாக அரசாங்கத்தின் கொள்முதல் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்ததால், ஏப்ரல் 1 ஆம் தேதி கோதுமை இருப்பு 8.3 மெட்ரிக் டன்னாக சரிந்தது. இது 2016 க்குப் பிறகு மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.
வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் தானியங்களின் அறுவடை, இந்த ஆண்டு தாமதமாகத் தொடங்கியது. மார்ச் மாதத்தில் பருவமழை பெய்ததால், விவசாயிகள் பயிர்களின் ஈரப்பதத்தை வயல்களில் காய்ந்து விட முடிவு செய்திருந்தனர்.
மத்தியக் குழுவில் அதிகப் பங்களிப்பினை அளிக்கும் பஞ்சாபில் கொள்முதல் ஏப்ரல் 19 நிலவரப்படி 3.9 மெட்ரிக் டன்னாகவும், ஹரியானாவில் இருந்து 3.8 மெட்ரிக் டன்னாகவும் இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கோதுமை கொள்முதல் 3.2MT ஆக உள்ளது. குஜராத் மற்றும் பீகாரில் இருந்து இன்னும் கோதுமையை அரசு கொள்முதல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதத்தில் பெய்த பருவமழை பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உற்பத்தியில் சிறிது இழப்பை ஏற்படுத்தியது. ஆனால் மழையைத் தொடர்ந்து குறைந்த வெப்பநிலை மற்ற பாதிக்கப்படாத பகுதிகளில் பயிர்களுக்கு உதவியது. "உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களுக்கு அதிக மகசூல் கிடைக்கும்" என்று உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க