தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) காரணமாகத் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனிடைய தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தரும்புரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும்
ஏனைய தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை
இந்நிலையில், சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
அதேபோல், புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க...
விவசாயிகளா நீங்கள்..! வட்டியே இல்லாமல் கடன் வாங்கலாம்!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிகள்-அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு!