விவசாயிகளின் வருவாய் உயர பாரம்பரியமிக்க தமிழகத்தின் வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துத் தமிழ்நாட்டு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
குறிப்பிட்ட தனித்துவமான பகுதிகளில் மட்டும் உற்ப்த்தியாகின்ற நிலையிலும், சுவை, மணம், ஊட்டச்சத்து போல பல்வேறு வகைகளில் சிறப்பு தன்மையுடன் விளங்க்குகின்ற பொருட்களுக்குப் புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் படிப் புவிசார் குறியீட்டிற்கான விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றது வழக்கம் ஆகும். இதன் மூலம் அவ்வவ் பகுதிகளில் உற்பத்தி ஆகும் பொருட்களுக்குச் சட்ட ரீதியாக ஒரு பாதுகாப்பு கிடைப்பதோடு அந்த பொருட்களின் மதிப்பு உலக அளவில் உயர்கின்றது.
கம்பம் பன்னீர் திராட்சி, இராமநாதபுரம் குண்டு மிளகாய், மதுரை மல்லி முதலான சிறப்பு தன்மை பெற்ற விளைப்பொருட்கள் அவ்வவ் பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த விளைபொருட்கள் தனி சுவை, மண்ம், குணம் என அனைத்துப் பாரம்பரியமிக்க தரத்துடன் சிறப்பு பெறுகின்றது.
வேளாண் விளைப்பொருட்கள் மட்டுமில்லாமல் 55 வகையான பொருட்களுக்குப் புவிசார் குறியீட்டுப் பதிவினை மேற்கொண்டு தமிழக அகில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. விருப்பாச்சி மலை வாழை, மதுரை மல்லி, கொடியக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள் முதலான 17 பொருட்கள் வேளாண் விளைப்பொருட்களாக இருப்பது விவசாயிகளூக்கு உந்துதலாக இருக்கிறது.
நடப்பு ஆண்டு 2023-24-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, திருப்பூர் மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லை, கடலூர் கோட்டிமுனை கத்தரி, கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்திரி, சிவகங்கை கருப்புக்கவுனி அரிசி, ஜவ்வாது மலை சாமை, தூத்துக்குடி விளாதிகுளம் மிளகாய் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக அரசு ரூ.45 லட்சம் நிதியினை ஒப்பளித்து அரசாணை வழங்கி அதற்கான பணிகள் துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க