என்னதான் ஓடி ஓடி உழைச்சாலும், சொந்தமாகத் தொழில் செய்து, லாபம் பார்ப்பதில்தான் எத்தனை சுகம்! இதை அனுபவிக்க வேண்டுமானால் நீங்களும் முதலாளி ஆக வேண்டுமல்லவா? அதற்கு 15 மடங்கு லாபம் தரும் இந்தத் தொழிலைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
நாம் கையில் எடுக்கும் இந்தத் தொழில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தேவைப்படும் ஒரு பொருளைப் பற்றியது. அதிலும் இந்த டிஜிட்டல் உலகம் உள்ளவரைக் கொளுத்தலாபம் தரும் தொழில்! அப்படி என்ன தொழில்?
ஸ்மார்ட் போன் (Smart Phone)
சில வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட்போன் வைத்திருப்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில் தற்போது, வீட்டுக்கு 3-4 ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்ளும் அளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது என்றால் மிகையாகாது. ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதைப்போல், ஆன்ராய்டு செல்போன் இல்லாத குடும்பமே இன்று இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.
அதிலும், பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் செல்ஃபோனை பலர் 2 அல்லது 3 வருடத்திற்கு ஒருமுறை மாற்றுவதையேக் கவுரவமாகக் கருதுகின்றனர். ஏன் சிலர் ஒவ்வொரு வருடமும் ஒரு ஸ்மார்ட்போனை மாற்றிக்கொள்வதையும் நம்மால் காண முடிகிறது.
டச் ஸ்கிரீன் (Touch Screen)
ஸ்மார்ட்போனில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுவது டச் ஸ்கீரீன்தான். இது எளிதில் உடைய கூடியது என்பதால், இதனைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். டச்ஸ்கிரீனை பாதுகாக்க பெரிதும் உதவும் ஒன்று தான் டெம்பர்ட் கிளாஸ் (Tempered Glass). ஆம், நீங்கள் நினைப்பது சரி தான். டெம்பர்ட் கிளாஸ் தயாரிப்பது தான் 15 மடங்கு லாபம் தரும் சூப்பரான பிஸ்னஸ். நாம் 150 முதல் 200 ரூபாய் வரை கொடுத்து கடைகளில் டெம்பர்ட் கிளாஸ்ஸை வாங்குகிறோம்.
15 மடங்கு லாபம் (15 Fold Benefit)
ஆனால் இதன் உற்பத்தி விலை எவ்வளவு தெரியுமா?, கேட்டால் அதிர்ந்து போவீர்கள், அதன் விலை வெறும் 10 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? இதனை160 ரூபாய்க்கு விற்பனை செய்தாலே 150 ரூபாய் லாபம். இதை எப்படிச் செய்வது என்பதைத் தான் பார்க்கப்போகிறோம்.
தயாரிப்பு (Production)
மண்ணில் இருந்து சிலிக்காவைப் பிரித்துஎடுத்து, அதனை ஆயிரத்து 500 டிகிரிக்கு மேல் உயர்மட்ட வெப்பநிலையில் கொதிக்கவைத்து உருக்கி வார்த்து, உடனடியாக மைனஸ் ஆயிரத்து 500 டிகிரிக்கு குளிர்ச்சியூட்டி டெம்பெர்ட் கிளாஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த உற்பத்தி முறை மிகப்பெரியத் தொழிற்சாலைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
மொத்த விற்பனை (Wholesale)
இதைத் தவிர ஒட்டு மொத்தமாக விற்பனை செய்யும் இடங்களில் டெம்பெர்ட் கிளாஸைக் கொள்முதல் செய்தும் லாபம் பார்க்கலாம். இவ்வாறு வாங்கி விற்கும்போது, 10 மடங்கு லாபம் கட்டாயம் கிடைக்கும். எனவே இளைஞர்களுக்கு அதுவும் ஆன்ராய்டு போனில் புகுந்து விளையாடும் நபர்களுக்கு இந்த தொழில் நல்ல லாபம் தரும் தொழிலாகும்.
மேலும் படிக்க...
தென்னை நார் தொழிலில் வருமான வாய்ப்பு! மதிப்புக் கூட்டினால் நல்ல இலாபம்!
திலேப்பியா மீன் வளர்த்து லாபம் பார்க்கலாம் வாங்க!!
பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? சில டிப்ஸ்!