விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு திருச்சியில் உள்ள மலைக்கோட்டை விநாயகருக்குப் பெரிய எடை கொண்ட 150 கிலோ அளவுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இது குறித்தான விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
திருச்சி மலைக்கோட்டைக்குக் கீழ் உள்ள மாணிக்க விநாயகர் கோவில் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் தலா 75 கிலோ எடையுள்ள மெகா கொழுக்கட்டையானது பிள்ளையார் சதுர்த்தியான இன்று படைக்கப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகத் திருச்சி மலைக்கோட்டையில் கொழுக்கட்டைப் படைத்து வழிபடும் நிகழ்வு சிறியதாக நடைபெற்றது. அதுவும் பொது மக்கள் இன்றி நடைபெற்றது. ஆனால் இன்று கொரோனா தொற்று மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதி என ஒவ்வொரு இடத்திலும் உள்ள பிள்ளையாருக்கு தலா 75 கிலோ என மொத்தமாக 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் இன்று உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேரில் வருகை தந்து வழிபட்டனர். கோவிலில் காலை முதலே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க