News

Saturday, 01 January 2022 10:30 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், ஊரடங்கு 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி 1 முதல் 8ம் வகுப்பு நேரடி வகுப்புக்குத் தடை விதிக்கப்படுகிறது.

ஆயிரத்தைத் தாண்டியது (Exceeded a thousand)

கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்ததுபோல் இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் ஒருபுறம், மறுபுறம் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு என அடுத்தடுத்து பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்குக் கட்டப்பாடுகளை அதிகரிப்பது, குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் பின்வரும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

  • சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

  • மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி கிடையாது.

  • அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 10.1.2022 வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

  • அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

  • ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

  • 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.

  • வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்துக் கடைபிடிக்கப்படும்.

  • உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும்

    அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

  • பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

  • துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதைக்  கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

  • கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும் படிக்க...

உடல் ஆரோக்கியமே முக்கியம்- ஈஷா வழங்கும் புத்தாண்டுப் பரிசு!

சிலிண்டர் வைத்திருப்போருக்கு 50லட்சம் வரை காப்பீடு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)