1. வாழ்வும் நலமும்

உடல் ஆரோக்கியமே முக்கியம்- ஈஷா வழங்கும் புத்தாண்டுப் பரிசு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Physical health is important- New Year gift from Isha!
Credit : Isha

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், யோகப்பயிற்சி முக்கியப் பங்காற்றுகிறது. இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

இலவச யோகா (Free Yoga)

தமிழ்நாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

2 நாட்கள் பயிற்சி (2 days training)

ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளது. ஈஷா தன்னார்வலர்கள் இவ்வகுப்பை நேரில் நடத்த உள்ளனர்.

பயிற்சி நேரம் (Training time)

இவ்வகுப்பில் சூரிய சக்தி என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். இந்த வகுப்புகள் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணி முதல் காலை 8.15 மணி, நண்பகல் 11.30 மணி முதல் 1.15 மணி, மாலை 5.30 மணி முதல் 7.15 மணி என 3 வேளைகளில் நடக்கும். இதில் ஏதேனும் ஒரு நாள் ஒரு நேரத்தை பங்கேற்பாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

யாரெல்லாம் பங்கேற்கலாம் (Anyone can participate)

இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும் இப்பயிற்சியில் 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் நடக்கும் இவ்வகுப்பில் பங்கேற்க Isha.co/SSRD என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவுக்கு உதவி தேவைப்பட்டால் 83000 99555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை!

சிலிண்டர் வைத்திருப்போருக்கு 50லட்சம் வரை காப்பீடு

English Summary: Physical health is important- New Year gift from Isha! Published on: 31 December 2021, 08:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.