சில ஆண்டுகளுக்கு முன்பு பணமிழப்பு 2,000 ரூபாய் நோட்டாக இருந்தால் ஒருவருக்கு இரண்டு நோட்டுகள் மட்டுமே கிடைக்கும். அந்த இரண்டு நோட்டுகளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் வெகுநேரமாக காத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இன்று இந்த 2000 ரூபாய் நோட்டுகள் புலக்கத்த்தில் குறைந்துகொண்டு வருகின்றன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
அந்த நேரத்தில் அனைவரின் கைகளிலும் அதிகமாகப் பார்க்க முடிந்த 2,000 ரூபாய் நோட்டுகளை, தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. அந்த நோட்டுகளெல்லாம் தற்போது எங்கே? இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கருப்புப் பணமாகப் பதுக்கப்பட்டுவிட்டது என்ற பரவலான குற்றச்சாட்டில் உண்மையுள்ளதா?
2016ஆம் ஆண்யில் வெளியான பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரத்தில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஒருபுறம், நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணப் புழக்கமும் அதிகரித்திருக்கிறது.
நாட்டில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்துவிட்டதாக அறிவிக்கப்பிற்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தன. மிகக் குறுகிய காலத்திலேயே பணப் புழக்கத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த அந்த நோட்டுகளைத் தற்போது அதிகம் பார்ப்பது கடினமாகிவிட்டது.
“2,000 ரூபாய் நோட்டுகளை நான் பார்த்தே நீண்ட காலமாகிவிட்டது” டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தாலும், வழக்கமான பண நோட்டுகளும் நாட்டின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கின்றன.
இந்தாண்டு மார்ச் 18 நிலவரப்படி, நாட்டில் ரூ. 31.05 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இது ரொக்கப் பரிவர்த்தனையில் எப்போதும் இல்லாத உச்சபட்ச அளவு ஆகும். இந்த அளவைப் பார்க்கும்போது, 2,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அச்சடிக்க வேண்டிய தேவையில்லை என நிதி நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளின் பயன்பாட்டில் அதிகரித்திருக்கிறது.
இந்த நிதியாண்டில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு 55 சதவிகிதம் அதிகரித்திருப்பதை ரிசர்வ் வங்கி கவனித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டாலும், அவற்றை நாட்டின் பொருளாதாரத்தில் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைப்பதற்கான வேலைகள் திட்டமிட்டப்படி நடந்து வருவதாகவே தெரிகிறது.
மேலும் படிக்க