கல்லுாரி மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி பெற்று செயல்படுத்தப்படும்,என்று, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி ஆசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு, அந்தந்த கல்லுாரி வளாகத்திலேயே முகாம் அமைத்து, இன்று முதல் தடுப்பூசி போடும் பணி துவங்குபட்டுள்ளது.
கோவாக்சின்' தடுப்பூசிக்கு, முதல் 'டோஸ்' மற்றும் இரண்டாவது டோஸ் தவணை காலம், 28 நாட்களாக இருக்கிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதால், மாணவர்களுக்கு அந்த தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை. எனவே, 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் தான், மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் செலுத்தப்பட உள்ளது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கான அவகாசம் 84 நாட்கள் என, சராசரியாக மூன்று மாதங்கள் ஆக உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். எனவே, வெளிநாட்டிற்கு செல்லும் மாணவர்களுக்கு, ஒரே மாதத்தில், இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்துவதை போல, தமிழக மாணவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், தற்போது வரை, கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான அவகாசம் 84 நாட்களாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு பிரத்யேகமாக, அதற்கான நாட்களை குறைப்பது குறித்து மத்திய அரசிடம் கலந்தாலோசித்து, அனுமதி பெற்ற பின் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
மேலும் படிக்க: