1. செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு! 1000 ரூபாயில் விற்பனை?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Cylinder Price Hike

சமையல் சிலிண்டர் விலை இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்றவாறு இந்தியாவில் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மாதத்துக்கு ஒரு முறை உயர்த்தப்படும் விலை என்ற நிலை மாறி, இரண்டு, மூன்று முறை சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி, இன்று சமையல் சிலிண்டர் விலை 25 ரூபாய் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.884.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றத்தின் கீழ், சிலிண்டர் விலை கொல்கத்தாவில் ரூ.911 என்ற விலையிலும், மும்பையில் ரூ.884.50 ஆகவும், சென்னையில் ரூ.900.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இதற்கு முன்னர் சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 1 முதல் இப்போது செப்டம்பர் 1 வரையில் மட்டும் சிலிண்டர் விலை மொத்தம் 190 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இப்போது தங்கம் விலை உயர்வை காட்டிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுதான் மிகப் பெரிய அக்கப்போராக உள்ளது. குறிப்பாக சமையல் சிலிண்டர் விலை உயர்வு அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்த்தப்படுகிறது. கொரோனா, ஊரடங்கு, வேலையின்மை, குறைந்த சம்பளம் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தவிக்கும் மக்களுக்கு இந்த விலையேற்றம் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

மேலும் படிக்க:

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்: ரூ. 50,000 டெபாசிட் செய்து ரூ. 3300 / - ஓய்வூதியம்!

​தமிழகத்திற்கு 30.6 TMC நீரை உடனே திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம்!

English Summary: Cylinder price hike! Selling for 1000 rupees? Published on: 01 September 2021, 12:39 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.