தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) உறுப்புக்கல்லூரியான தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் இணையவழி சொற்பொழிவில் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தேசிய மகளிர் விவசாயிகள் மற்றும் உலக மாணாக்கர் தினத்தை முன்னிட்டு 20 மணி நேர தொடர் இணையவழி சொற்பொழிவுகள் (Wcbinarathon) நடத்தப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் இந்த சாதனை அரங்கேற்றப்பட்டது.
இதில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த முனைவர்கள் பங்கேற்று, இந்திய வேளாண்மையில் மகளிரின் முக்கிய பங்கு மற்றும் இந்திய சமுதாயத்தில் மாணவர்களின் வளர்ச்சி போன்ற தலைப்புகளில் உரையாற்றினர்.இந்த சாதனை முயற்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் நீ.குமார் தொடங்கி வைத்து, இன்றைய வேளாண்மை சூழலில் மகளிரின் பங்கு பற்றி உரையாற்றினார்.
வேளாண்மை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள், மாணவர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் பேராசிரியர்களும் உரையாற்றினர். இந்த நிகழ்வு 'YOUTUBE இல் நேரலையாக 20 மணிநேரமும் ஒளிபரப்பப்பட்டு பார்வையாளர்களை கடந்தது. இது ஓர் உலக சாதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க...
கேரட் உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி-அரசு சார்பில் கேரட் கழுவும் இயந்திரம்!!
இயற்கை உரத்தில் உள்ள சத்துக்கள் சதவீதம் தெரியுமா? விபரம் உள்ளே!