சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிரடியாக குறைந்து ரூ. 44,480-க்கு விற்பனையாகிறது. எதிர்ப்பாராத இந்த விலை சரிவு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் அதிகமாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒருவாரமாக யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தும், கொஞ்சம் சரிந்தும் காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள்/ நகை பிரியர்கள் தங்க நகையை வாங்கலாமா, வேண்டாமா என்கிற குழப்பத்திற்கு உள்ளாகினர். இதனிடையே கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலையில் கணிசமான ஏற்ற இறக்கம் தென்பட்ட நிலையில் இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.30 வரை விலை குறைந்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சென்னையில் நேற்றைய 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,590 ஆக விற்ற நிலையில் இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,560 ஆக விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.240 வரை குறைந்து ரூ.44,720 ஆகவும் விற்பனையாகிறது.
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக திகழ்கிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிப்பது வாடிக்கை. தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் பெரிய அளவில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ஆகவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,500 ஆகவும் விற்பனையாகிறது.
எதிர்பாராத இந்த விலை இறக்கமானது, மாதத்தொடக்கத்தில் வந்திருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்திருப்பவர்கள் சற்று ஆர்வமாக உள்ளனர்.
மேலும் காண்க:
மாத தொடக்கத்திலேயே நல்ல செய்தி- சிலிண்டர் விலை அதிரடியாக குறைவு
அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓய்வு வயது குறைக்கப்படுகிறதா? அமைச்சர் பதில்