பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 August, 2023 3:43 PM IST
2nd phase, 4 direct paddy purchase station system in Ariyalur!

அரியலூர் மாவட்டத்தில் நவரைப் பட்டத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக குழுமூர், கோவிந்தபுத்தூர், அருள்மொழி, இடங்கண்ணி ஆகிய 4 இடங்களில் இரண்டாம் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து E-KYC கொடுத்து Blue Tooth Printer கையடக்க கருவியில் விவசாயிகளின் விபரங்கள் தெரியவரும். இதனடிப்படையில், முன்பதிவு செய்யப்படும்.

நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்ததும், சம்மந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்மந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஜா.அனி. மேரி ஸ்வர்ணா, அவர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே, அரியலூர் மாவட்ட விவசாயிகள், நவரைப் பட்டத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக அமைக்கப்பட்ட நிலையத்தை பயன்படுத்தி, நெல் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

மகளிர் உரிமைத் தொகை பெற கோவை மகளிருக்கு மற்றும் ஓர் வாய்ப்பு! பயன்படுத்திக் கொள்ளவும்!

எண்ணெய் பனை சாகுபடிக்கான மெகா தோட்ட இயக்கம் - மானியம் பெற அழைப்பு!

English Summary: 2nd phase, 4 direct paddy purchase station system in Ariyalur!
Published on: 01 August 2023, 03:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now