1. விவசாய தகவல்கள்

எண்ணெய் பனை சாகுபடிக்கான மெகா தோட்ட இயக்கம் - மானியம் பெற அழைப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Thanjavur to Mega Plantation Drive for Oil Palm Cultivation - Call for subsidy!

எண்ணெய் பனை உற்பத்திப் பகுதியை 10 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கவும், 2025-26 ஆம் ஆண்டில் கச்சா பாமாயில் உற்பத்தியை 11.20 லட்சம் டன்னாக உயர்த்தவும், இந்திய அரசு ஆகஸ்ட் 2021 இல் சமையல் எண்ணெய்களுக்கான தேசியத் திட்டத்தைத் தொடங்கியது.

சமையல் எண்ணெய்களின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன், இறக்குமதிச் சுமையைக் குறைப்பதன் மூலம் மிஷன் இந்தியாவை 'ஆத்ம நிர்பார் பாரத்' நோக்கி வெற்றிகரமாக வழிநடத்துகிறது.

எனவே, இத்திட்டத்தின் கீழ், நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியை மேலும் அதிகரிக்க, மாநில அரசுகளும், ஆயில் பாம் பதப்படுத்தும் நிறுவனங்களும் இணைந்து 25 ஜூலை 2023 முதல் ஒரு மெகா ஆயில் பாம் தோட்ட இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. மூன்று முக்கிய எண்ணெய் பனை பதப்படுத்தும் நிறுவனங்கள், அதாவது பதஞ்சலி ஃபுட் பிரைவேட். லிமிடெட், கோத்ரெஜ் அக்ரோவெட் மற்றும் 3F ஆகியவை சாதனைப் பரப்பு விரிவாக்கத்திற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து தீவிரமாக ஊக்குவித்து வருகின்றன.

2023 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய, இந்த மெகா தோட்ட இயக்கம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை தொடரும். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, கர்நாடகா, கோவா, அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாச்சலத்தில் எண்ணெய் பனை வளரும் முக்கிய மாநிலங்கள் ஆகும், மேலும் இந்த முயற்சியில் மேற்குறிப்பிட்ட மாநிலங்கள் பங்கேற்கின்றன.

இதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை திட்டத்தின் கீழ் மாபெரும் எண்ணெய் பனை கன்று நடவு முகாம் 31.07.2023 அன்று ஒரத்தநாடு அடுத்து துறையூண்டார் கோட்டை கிராம பஞ்சாயத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இம் முயற்சியை தொடக்கி வைத்து, பேசிய மாவட்ட ஆட்சி தலைவர், எண்ணெய் பனை பயிரானது நடவு செய்ததிலிருந்து மூன்றாம் ஆண்டு முதல் மகசூல் தரவல்லது. ஒரு எக்டருக்கு 20லிருந்து 25 டன் அளவு எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தப்பட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.13346-க்கு அரசே அங்கீகரித்த கோத்ரேஜ், அக்ரோவெட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுவதனால் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் சிரமம் இன்றி கையால முடிகிறது. இந்த எண்ணெய் பனை நடவு செய்வதற்கு வண்டல் கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதி மிக்க பகுதி பயிர் செய்யப்படுகிறது.

எண்ணெய் பனை மானியம் பெற செய்ய வேண்டியது?

எண்ணெய் பனை பயிர் செய்ய ஏற்ற வட்டாரங்கள் தஞ்சாவூர், பூதலூர், ஒரத்தநாடு, திருவோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகும். எண்ணெய் பனை மானியம் பெற விரும்பும் பயனாளிகள் இதற்கு தேவையான ஆவணங்களான

  • கணினி சிட்டா,
  • அடங்கல்,
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு,
  • நில வரைபடம் மற்றும்
  • அதார் நகல்

இதனை சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்தும் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் பயன்பெறலாம்.

எனவே, இன்றே உங்கள் அருகில் உள்ள வேளாண் வட்டார அலுவலகம் அல்லது தோட்டக்கலை வட்டார அலுவலகம் அணுகி, தேசிய அளவில் நடைபெறும், இந்த மெகா தோட்ட இயக்கத்தில் மானியத்துடன் பங்குபெற்று பயன்பெறுங்கள். 

மேலும் படிக்க:

மகளிர் உரிமைத் தொகை பெற கோவை மகளிருக்கு மற்றும் ஓர் வாய்ப்பு! பயன்படுத்திக் கொள்ளவும்!

தந்தையின் மறைவால் விவசாயத்தில் இறங்கிய மகள்- கைக்கொடுத்த மிளகாய்!

English Summary: Thanjavur to Mega Plantation Drive for Oil Palm Cultivation - Call for subsidy! Published on: 01 August 2023, 12:00 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.