மாநிலங்களின் கையிருப்பில் 3.09 கோடி கோவிட் தடுப்பூசிகள் (Covid Vaccines) உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது.
இலவச தடுப்பூசி
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை 45,37,70,580 கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. அதில், 42,28,59,270 தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டு உள்ளன.
மாநிலங்களில் கையிருப்பில் தற்போது 3,09,11,310 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், 59,39,010 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 43,51,96,001 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
கொரோனா தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு!
குளிர்காலத்தில் கொரனாவின் புதிய ரகம்: பிரஞ்சு விஞ்ஞானி தகவல்