News

Tuesday, 30 August 2022 08:37 PM , by: T. Vigneshwaran

Special buses

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள்இயக்கப்படுவதாக அறிவிப்பு. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக 350 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை (ஆகஸ்ட் 31) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூ, பொரி, பழங்கள், விநாயகருக்கு குடை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாளைய தினம் அரசு விடுமுறை என்பதால், பிற மாவட்டங்களில் தங்கி வேலை செய்வர்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏதுவாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இன்று சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க

Organic Farming Subsidy: விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ. 10,800 பெற முடியும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)