News

Tuesday, 23 August 2022 03:10 PM , by: Poonguzhali R

37,450 jobs in Tamil Nad

சென்னையில் இன்று நடைபெற்ற தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனடிப்படையில் தமிழகத்தில் 37,450 புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை சார்ந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இம்மாநாட்டிற்கு ல்2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில்ல் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒப்பந்தங்கள் செய்த நிறுவனங்கள் வருமாறு,

  • கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட்
  • கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட்
  • கோத்தாரி - SEMS குழுமம்
  • வேகன் குழுமம்
  • வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்

இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

துறைவாரியாக, ஆய்வுகள் மேற்கொண்டு அத்துறை வளர்ச்சியைச் சீரான முறையில் நெறிப்படுத்தும் வகையில், துறை சார்ந்த கொள்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், தோல் அல்லாத காலணிப் பொருட்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்திடு வகையிலும், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கவும், ஏற்றுமதியைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையிலும் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

மாநாட்டில் காணொலிக் காட்சி வழியாகச் சர்வதேசக் காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள், காலணி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர், தமிழ்நாட்டில் உள்ள சந்தை நிலவரங்களையும் அதன்மூலம் உருவாகும் முதலீடு வாய்ப்புகளை குறித்தும் உரையாற்றினர்.

மேலும் படிக்க

விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு அறிவிப்பு! ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!

எண்ணெய் பனை சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)