தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக 50 ஏக்கர் பரப்பளவு காடு பகுதி எரிந்து கருகி நாசமாகியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா அருகே தேவதானப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் முருகமலைப் பரமசிவன் கோயிலுக்கு கீழ் உள்ள வனப்பகுதியில் இன்று காலை முதல் தொடர்ந்து காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.
இதில் 50 ஏக்கருக்கும் மேல் காடுகள் பற்றி எரிகிறது. விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைச் செடிகளும் காட்டுத் தீயினால் எரிந்து நாசமாகின்றன.
இதனால் அப்பகுதியில் வாழும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை காத்து கொள்ள அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன மேலும் விவசாயநிலங்களை நாசமாகின்றன. இதனால் விவசாயிகள் பயிர்கள் சேதமடையக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
75 இனங்கள் மற்றும் 45 வகையை சேர்ந்த மொத்தம் 86 தாவர இனங்கள், இனவளவியல் பயன்பாடுகளுடன் பதிவாகியுள்ளன. மருத்துவ தாவர இனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அகாந்தேசி (6 இனங்கள் மற்றும் 7 இனங்கள், மொத்தமாக சேகரிக்கப்பட்ட தாவரங்களில் 8%) மற்றும் கக்கூர்பிடேசி (5 இனங்கள்) ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் வகைகள். மருந்து தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு தாவர பாகங்களில், இலைகள் பெரும்பாலும் நோய்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டன.
ஆனால் தற்போது,இந்த காட்டில் ஏற்பட்ட தீயால் 50 ஏக்கர் பரப்பளவு கருகி சாம்பலானது,வனத்துறை விரைவில் தீயை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க:
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை செடிகளும் அதன் மருத்துவ குணங்களும்