Krishi Jagran Tamil
Menu Close Menu

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை செடிகளும் அதன் மருத்துவ குணங்களும்

Tuesday, 14 May 2019 04:25 PM

நீர் பிரம்மி

நீர் பிரம்மி நரம்பு கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. வலிப்பு, மனநோய், இவைகளுக்கு  மருந்தாக பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக மற்றும் மூட்டு  வலிகளுக்கு, ஆஸ்துமா பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது. இதனுடன் நீர் பிரம்மி இருமல், காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் பாரம்பரிய குணம் ஞாபக சக்தியை அதிகப்படுத்துவது.சித்த மருத்துவத்தில் இவை, மூட்டு வலி, இணைப்புகளில் வீக்கம், மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாக பயன் படுத்தப்படுகிறது. இவை குரல்வளை அழற்சி, நெஞ்சு எரிச்சல்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

மணத்தக்காளி

மணத்தக்காளியானது வாத நோய், வீக்கம், இருமல், ஆஸ்துமா, மார்ப்புச்சளி, காயம், அல்சர், வயிற்று மந்தம், ஈரல் வீக்கம், காதுவலி, கண், வாந்தி, இதய நோய், தொழு நோய், தோல் நோய்கள், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம், நச்சு தடை மருந்து, ஒவ்வாமை, இதய மருந்து, புண்ணாற்றுமை, செரிமானம், குடலிளக்கி, புத்துணர்ச்சி, மனதை அமைதிப்படுத்துதல் ஆகிய நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் சத்து மருந்தாகவும் முழுத் தாவரம் பயன்படுகிறது.

துளசி

காய்ச்சல், தொண்டை புண், தலை வலி, இதய நோய், மனஅழுத்தம், கண் பிரச்சனை, வயிற்று பிரச்சனை, சளி இரும்பல், நீரிழிவு, சிறுநீரக கல் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் துளசி சிறந்த மருந்தாக அமைகிறது.

வில்வம்:

மஞ்சள் காமாலை, காய்ச்சல், சீதபேதி, அனீமியா, மற்றும் காலரா ஆகியவற்றிற்கு  தடுப்பு மருந்தாக பயன்படுகிறது.

 

கொத்தமல்லி

பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு, ஆகியவை குணமாகும். மன வலிமை மேம்படும் . மன அமைதிக்கும், தூக்கமின்மைக்கு தீர்வு கிடைக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.

கற்பூர வல்லி

மிகச் சிறந்த இருமல் மருந்து. மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் குணமாகும்.

கறிவேப்பில்லை

சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

வல்லாரை

மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது.

 

தூது வேளை

நரம்பு தளர்ச்சி, மார்புச்சளி, தோல்நோயிகள், முழுமையாக குணமாகும். குழந்தைகளுக்கு நல்ல மூளை வளர்ச்சி, ஞாபகத் திறன் வளர சிறந்து விளங்குகிறது. காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் சிறந்தது.

medicina herbal plants thulasi vallarai coriander leaf brahmi blacknight shade etc
English Summary: herbal, medicinal plants and their medicinal benefits

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
  2. கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை
  3. கல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்
  4. விவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி
  5. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்
  6. உற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்
  7. கொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு
  8. 'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா?
  9. விவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு
  10. அதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.