News

Wednesday, 29 March 2023 04:39 PM , by: Elavarse Sivakumar

5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் அரசு விரைவு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என  அமைச்சர்  சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் மாதம் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் 6 ஆவது முறை முன்பதிவு செய்து பயணம் செய்யும் போது, இந்த சலுகை அவர்களுக்கு கிடைக்கும்.

சட்டப்பேரவையில்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில்,  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, சிறப்பு ஆபர் வழங்கப்படும் என அறிவித்தார்.

50% கட்டணச் சலுகை

ஒரே மாதத்தில் 6வது முறையாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ பயணம் செய்யும்போது பயணக் கட்டணத்தில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றார்.

மேலும், கட்டணமில்லா பேருந்துகளில் கடந்த 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்திருப்பதாக, கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.200 முதல் மாதந்தோறும் ரூ.1,500 வரை சேமிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், கட்டணமில்லா பேருந்து திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவங்கர் கூறினார்.

மேலும் படிக்க…

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்- விவசாயிகளின் பரிதாப நிலை!

ஒரு லட்சம் ரூபாய் பைக்கிற்கு, ஒரு கோடி ரூபாய்க்கு நம்பர் பிளேட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)