1. Blogs

ஒரு லட்சம் ரூபாய் பைக்கிற்கு, ஒரு கோடி ரூபாய்க்கு நம்பர் பிளேட்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
One lakh rupees for a bike, one crore rupees for a number plate!

ஃபேன்ஸி நம்பர்கள் மீதான மோகம், நம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன் வாங்குவது முதல் வாகனங்களின் நம்பர் பிளேட் வரை, இந்த காய்ச்சல் நம்மில் பலரை எந்த இலக்கிற்கும் கொண்டு செல்கிறது.

ரூ.1 கோடி

இந்த மோகத்தால், ஒருவர், ஒரு லட்சம் ரூபாய் பைக்கிற்கு, ஒரு கோடி ரூபாய் செலவு செய்து நம்பர் பிளேட் வாங்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?  நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், ஏனெனில் அதுதான் உண்மை.

அதிகாரிகள் மகிழ்ச்சி

எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் போட்டி

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட ஃபேன்சி நம்பர்களை வாங்குவதற்காக சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர். இதில் உச்சக்கட்டம் என்னவென்றால்,  சிலர் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்களது பிறந்த நாள், வருடம் கொண்ட எண் என விதவிதமான எண்களை கேட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட எண்ணுக்காக கடும் போட்டி ஏற்படுகிறது.

ஏலம்

இதையடுத்து அதிகாரிகள் அந்த எண்ணை ஏலத்தில் விடுகிறார்கள். அது போன்று இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தான் 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய ஸ்கூட்டிக்கு பேன்சி நம்பர் பெறுவதற்காக ரூ.1 கோடி செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடிப்படை விலை ரூ.1000

இந்த ஏலத்தில் அந்த எண்ணுக்கு ஆரம்ப கட்டமாக ரூ.1,000 ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவரும் ஏலத் தொகையை உயர்த்தி கொண்டே சென்ற நிலையில், கடைசியாக ஒரு உரிமையாளர் அந்த எண்ணை ரூ.1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பெற்றார்.

மேலும் படிக்க...

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் சிவன்!

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!- விபரம் உள்ளே

English Summary: One lakh rupees for a bike, one crore rupees for a number plate! Published on: 27 February 2023, 09:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.