மதுரை அடிப்படையில் வேளாண்மை சார்ந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் நெல், சிறுதானியம், பயறுவகை, பருத்தி பயிர்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரியில் சாகுபடியும் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.
இங்கே விவசாய உற்பத்தியை இருமடங்காக பெருக்குவதும், வருமானத்தை மும்மடங்காக உயர்த்துவதும் வேளாண்மைத் துறையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 6000 ஹெக்டேரில் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் மக்காச்சோளம், கம்பு, சோளம், குதிரைவாலி, பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
இதற்காக இங்கே, 100 ஹெக்டேர் குழுமமாக பிரித்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விதைகள் வாங்க, உயிர் உரம், இடுபொருள், வளர்ச்சி ஊக்கிகள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி, அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களில் விதை மற்றும் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
பயணிகளுக்கு செப்டம்பர் 25 வரை விமானத்தில் இலவச பயணம்-ஏன்?
விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் முதல்வர், காரணம் என்ன?