தீபாவளி, தந்தேரஸ் என பண்டிகை நாட்கள் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்த 6 நாட்களுக்கு வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என தெரிகிறது. எனவே, இன்று வங்கி கிளைகள் கடும் கூட்டத்துடன் காணப்படுகின்றன.
வங்கி விடுமுறை (Bank Holidays)
பொதுவாகவே ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனி கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். இவ்வகையில் நாளை (அக்டோபர் 22) நான்காம் சனிக்கிழமை நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். அடுத்து ஞாயிறு வழக்கம் போல வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். இதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக் கிழமை அன்று தந்தேரஸ் பண்டிகை கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அக்டோபர் 24ஆம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, திங்கள் கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். இதன்பின் அக்டோபர் 25ஆம் தேதி லக்ஷ்மி பூஜை நாளாகும். இந்நாளில் கேங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்பூர் ஆகிய இடங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
பின்னர் அக்டோபர் 26ஆம் தேதி கோவர்தன் பூஜை நாளில் அகமதாபாத், பெங்களூரு, டேராடூன், மும்பை, நாக்பூர், கான்பூர், லக்னோ, ஷிம்லா, ஸ்ரீநகர், ஜம்மூ, கேங்க்டாக் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். அக்டோபர் 27ஆம் தேதி சித்ரகுப்தா ஜெயந்தி நாளில் கேங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ ஆகிய பகுதிகளில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
மேலும் படிக்க
தீபாவளிக்கு ஊருக்கு செல்ல தட்கலில் ரயில் டிக்கெட்: ஈஸியான வழிமுறை இதோ!
பென்சன் கணக்கு தொடங்குவது மிகவும் ஈசி: பென்சன் ஆணையத்தின் புதிய வசதி!