1. மற்றவை

பென்சன் கணக்கு தொடங்குவது மிகவும் ஈசி: பென்சன் ஆணையத்தின் புதிய வசதி!

R. Balakrishnan
R. Balakrishnan
Pension scheme

பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக்கொள்வதற்காக டிஜிலாக்கர் (Digi Locker) வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக டிஜி லாக்கர் வசதி கொண்டுவரப்பட்டது.

ஓய்வூதியம் (Pension)

டிஜிலாக்கரில் மக்கள் தங்களது அடையாள அட்டை, ஆவணங்கள், சான்றிதழ்கள், பென்சன் சான்றிதழ் போன்ற பல்வேறு ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்நிலையில், டிஜிலாக்கருடன் பார்ட்னர் நிறுவனமாக பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA இணைந்துள்ளது. இதன்படி, பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA, டிஜிலாக்கர் வாயிலாக புதிய சேவைகளை அறிமுகப்படுத்துக்கிறது. இதன்படி, டிஜிலாக்கர் வாயிலாகவே ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி தேசிய பென்சன் திட்டத்தின் (NPS) கீழ் கணக்கு தொடங்கலாம்.

ஓட்டுநர் உரிமம் வைத்து பென்சன் கணக்கு தொடங்குவது எப்படி?

  • https://enps.nsdl.com இணையதளத்துக்கு செல்லவும்.
  • அதில் DigiLocker வாயிலாக புதிதாக பதிவு செய்வதற்கான பகுதியை கிளிக் செய்யவும். அதில் ஓட்டுநர் உரிமத்தை (Driving License) தேர்வு செய்யவும்.
  • இப்போது டிஜிலாக்கர் இணையதளம் திறக்கும். அதில் உள்ளே நுழையவும்.
  • டிஜிலாக்கர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்த NPSக்கு அனுமதி அளிக்கவும்.
  • பான் கார்டு எண், தனிநபர் விவரங்கள், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.
  • நாமினேஷன் முடித்து இதர விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
  • தேசிய பென்சன் திட்டத்திற்கான பங்களிப்பு தொகையை செலுத்தவும்.
  • உங்கள் தேசிய பென்சன் திட்ட கணக்கு தொடங்கப்பட்டுவிடும்.

மேலும் படிக்க

பென்சன் வாங்குவோருக்கு புதிய சேவை: இனி இது போதுமே!

குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு: விரைவில் அனைத்து மாநிலங்களிலும்!

English Summary: Opening a Pension account is very easy: New feature of pension Authority! Published on: 20 October 2022, 07:55 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.