கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணைத் திறக்கப்பட்ட நிலையில், தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, டெல்டா மாவட்டங்களில் 70 சதவீதம் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
தூர்வாரும் பணி
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி பணி மற்றும் தூர்வாரும் பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக கொல்லுமாங்குடி பகுதியில் 18 ஏக்கர் எந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள், செருவலூர் கிராமத்தில் 80 ஏக்கரில் நேரடி விதைப்பு செய்துள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார். தொடர்ந்து திருவாரூர் விதை பதனிடும் நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளை (Seed) பார்வையிட்டு ஆய்வு செய்து, நெல் விதை, இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். பின்னர் ஓடம்போக்கி ஆற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
70 சதவீதம் பணிகள் நிறைவு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறுவை சாகுபடியை மேற்கொள்ள உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ரூ.65 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 70 சதவீதம் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சாகுபடிக்கு (Cultivation) தேவையான விதைகள் கையிருப்பில் வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடன்
நடப்பு ஆண்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கடன் (Loan) வழங்க கூட்டுறவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று மாலை வந்தார். அங்கு அலுவலக வளாகத்தில் தென்னங்கன்று (Coconut plant) நட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 20 விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர்அதிசயம் (பயிர் ஊக்கி), TANUVAS பல்கலைக்கழக தாது உப்பு கலவை ஆகியவற்றை வழங்கினார். மேலும் புதிய பல்வேறு சாகுபடி ரகங்கள் இடம் பெற்றிருந்த கருத்து காட்சியையும் அமைச்சர் பார்த்து அது தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தார்.
தென்னை கள ஆய்வு
அப்போது அவர் தென்னை தொடர்பான கள ஆய்வுகளை வேளாண் விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் அலுவலக பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அமைச்சருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.பி.ராஜா, பூண்டி கே.
கலைவாணன், வேளாண் இணை இயக்குனர்கள் திருவாரூர் சிவகுமார், தஞ்சாவூர் ஜஸ்டின், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், தாசில்தார் மணிமன்னன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாலு, நீடாமங்கலம் ஒன்றியகுழுத்லைவர் செந்தமிழ்ச்செல்வன், வேளாண் விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், அனுராதா, கமலசுந்தரி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
மேலும் படிக்க
இயற்கை உரத்திற்காக வயல்களில் செம்மறி ஆடுகளை மேய விடும் விவசாயிகள்!
ரூ. 61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!