1. செய்திகள்

இயற்கை உரத்திற்காக வயல்களில் செம்மறி ஆடுகளை மேய விடும் விவசாயிகள்!

R. Balakrishnan
R. Balakrishnan
goats
Credit : Vivasayam

விவசாயத்திற்குத் தேவையான இயற்கை உரத்திற்காக (Organic Fertilizer), வயல்களில் செம்மறி ஆடுகளை விவசாயிகள் மேய விடுகின்றனர். இதனால், விளைநிலங்கள் இயற்கை விவசாயத்திற்கு ஏற்றதாக மாறிவிடும்.

முப்போக சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணை (Mettur Dam) ஜூன் 12-ந் தேதி திறக்கவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு போக சம்பா சாகுபடியை மட்டுமே செய்ய முடிந்தது. கடந்த ஆண்டு (2020) மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) திறந்து வைத்தார்.

ரசாயன உரம்

திருமருகல் ஒன்றியத்தில் 20 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் தங்களது விளை நிலங்களை சாகுபடிக்காக (Cultivation) தயார்படுத்தி வருகின்றனர். குறுவை சாகுபடி பணிகள் தொடங்கிய நிலையில் உரங்களின் பயன்பாடு மிக அவசியமாகிறது. ரசாயன உரங்களின் விலை உயர்வும், தொடந்து பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் மண் வளம் மாறி மகசூல் (Yield) குறைந்து வருவது போன்ற காரணங்களால் இயற்கை முறையிலான சாகுபடிக்கு விவசாயிகள் திரும்பி வருகின்றனர்.

செம்மறி ஆடுகள்

ரசாயன உரங்கள் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையிலும், இயற்கை உரத்துக்காக வயல்களில் ஆடுகளை மேயவிட்டு அதன் மூலம் கிடைக்கும் எருவை உரமாக்கி வருகின்றனர். இதற்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகளை திருமருகல் ஒன்றிய விவசாயிகள் வயல்களில் மேய விட்டுள்ளனர். மேலும் இந்த ஆடுகளை வயல்களில் இரவில் ஆடுகளை கிடை போட்டு எரு சேர்க்கின்றனர். இந்த ஆடுகளின் கழிவுகள் மூலம் விளை நிலங்களில் இயற்கை உரம் (Organic Fertilizer) கிடைப்பதுடன், மண் வளமும் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க

பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!

நாட்டுக்கோழி வளர்ப்பில் முட்டையின் சத்துக்களுக்கு தேவையான தீவனங்கள்!

English Summary: Farmers graze goats in the fields for natural manure! Published on: 16 June 2021, 09:45 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.