மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 August, 2022 4:08 PM IST
750 buses operated on the occasion of Velankanni temple festival

வேளாங்கண்ணி புனித அன்னை அரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் சிறப்பு ஏற்பாடு. 750 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் 25 ஆகஸ்ட் 2022 முதல் 11 செப்டம்பர் 2022 வரை இயக்கப்பட உள்ளது. வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல் , மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆக மொத்தம் 750 சிறப்பு பேருந்துகள் 25 ஆகஸ்ட் 2022 முதல் 11 செப்டம்பர் 2022 வரை இயக்கப்பட உள்ளது.

பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது தவிர குழுவாக பயணம் செய்ய விரும்புவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு!

தாட்கோ மூலம் Medical Coding இலவச பயிற்சி, வேலை நிச்சயம்!

English Summary: 750 buses operated on the occasion of Velankanni temple festival
Published on: 26 August 2022, 04:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now