News

Wednesday, 02 June 2021 04:46 PM , by: Sarita Shekar

7th pay commision

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட காலக் காத்திருப்பு நிறைவேறியது . ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப் போகிறது. ஊழியர்களின் அகவிலைப்படி இப்போது 17% என்ற விகிதத்தில் கிடைக்கிறது, இது தற்போது  நேரடியாக 28% ஆக மாறும். சம்பள உயர்வு வடிவத்தில் இந்த அதிகரிப்பின் பயனை ஊழியர்கள் பெறுவார்கள்.

இது தவிர, ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், நிலுவையில் உள்ள தவணைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 17 சதவிகிதம் என்ற விகிதத்தில் வழங்கப்படும் டிஏ 28 சதவிகிதமாக அதிகரிக்கும். பின்னர் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். ஊழியர்கள் இரண்டு ஆண்டுகால டி.ஏ.வின் பயனை நேரடியாகப் பெற உள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தது. இரண்டாம் பாதியில், அதாவது ஜூன் 2020-ல் இது 3 சதவிகிதம் அதிகரித்தது. இப்போது 2021 ஜனவரியில், அகவிலைப்படி மீண்டும் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது இது மொத்தம் 28 சதவீதமாகிவிட்டது. இருப்பினும், இந்த மூன்று தவணைகளும் இதுவரை செலுத்தப்படவில்லை.

ஜூன் மாதத்திலும் 4% டிஏ அதிகரிக்கும்

ஜூன் 2021 இன் அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட உள்ளது. அந்த அதிகரிப்பும் 4% இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நடந்தால், ஜூலை 1 ம் தேதி மூன்று தவணைகள் செலுத்தப்பட்ட பிறகு, அடுத்த 6 மாதங்களில் மேலும் 4% டி.ஏ. ஊழியர்களுக்கு அளிக்கப்படும். அப்போது அகவிலைப்படி மொத்தம் 32 சதவீதத்தை எட்டும். தற்போது டி.ஏ 17% என்ற அளவில் அளிக்கப்படுகின்றது. ஒவொரு 6 மாதத்திலும் மத்திய அரசு இதில் மாற்றங்களை செய்கிறது. இதன் கணக்கீடு அடிப்படை ஊதியத்தை (Basic Pay) அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றது.  இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வெவ்வெறு டி.ஏ. கிடைக்கிறது.

அரியர் தொகை வழங்கப்படாது

கோவிட் -19 காரணமாக, கடந்த ஆண்டு  2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூலை 1 வரை அரசாங்கம் அகவிலைப்படியை முடக்கியது. ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரனமும் ஜூலை 1, 2021 வரை அதிகரிக்காது. இந்த முடிவின் காரணமாக, 2021-2022 நிதியாண்டில் மொத்தம் ரூ .37000 கோடியை அரசு சேமித்துள்ளது. இருப்பினும், ஜனவரி 1 முதல் நிலுவைத் தொகையும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய ஊழியர்கள் கோரிக்கையிட்டனர். ஆனால், நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஜூலை 2021 இல் டி.ஏ மற்றும் டி.ஆர் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும்.

மேலும் படிக்க

மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்?

தனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் "பீமா ஜோதி" பாலிசி அறிமுகம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)